தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ‘டி.எம்.கே., பைல்ஸ்’ என்ற தலைப்பில் திமுக மீது உள்ள ஊழல் குற்றசாட்டுகளை இன்று வெளியிடுவதாக நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இதனால், சமூகவலைத்தளத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
அதேபோல, இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள திமுக சொத்து பட்டியலை முன்னிட்டு அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் இன்னும் அதைப் பார்க்கவில்லை. ஆனால் அவையெல்லாம் அரசியல் ஸ்டண்ட், அவ்வளவு தான்” என்று பதிலளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil