நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமு.க பொதுச் செயலாளரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 24) மாலை வேலூரில் இருந்து சென்னைக்குப் புறப்பட இருந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“