தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி.நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இருவரும் தி.மு.கவின் மூத்த தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 25) இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சி பேசிய அமைச்சர் துரைமுருகன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் கல்லூரி காலம் பற்றி கலகலப்பாக பேசினார்.
துரைமுருகன் பேசுகையில், "பொன்முடி எனது இனிய நண்பர். கல்லூரி காலத்தில் ரொம்ப வருத்தப்பட்டார். அவருடைய வகுப்பில் ஒரே ஒரு பெண் மட்டும் தான் இருந்தார். நான் கல்லூரி படிக்கும் போது என்னுடன் 32 பெண்கள் படித்தனர். எம்.ஏ படிக்கும் போது 19 பெண்கள். 5 பேர் தான் பாய்ஸ் இருந்தோம். அதுக்கெல்லாம் ஒரு ராசி வேணும்ப்பா" என்று கலகலப்பாக பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“