மணல் குவாரிகளில் மணல் கொள்ளை நடக்கவில்லை என நிரூபித்துள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு பொறுப்பான மாவட்ட ஆட்சியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறை 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறாஇ ஆட்சேபனை மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மணல் கொள்ளை நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது குறித்து திருச்சியில் அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், மணல் குவாரிகளில் மணல் கொள்ளை நடக்கவில்லை என நிரூபித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“