ஐ.டி ரைய்டு என்ற பெயரில் எனது உதவியாளரை 5 நாட்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்டு அச்சுறுதல் செய்தனர் என்று அமைச்சர் ஏ.வ வேலு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஏ.வ வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் 5 நாட்கள் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது
” ஐ.டி ரைய்டு என்ற பெயரில் எனது நேர்முக உதவியாளர் சுப்பிரமணியை 5 நாட்கள் அச்சுறுதல் செய்தனர். சென்னையில் அவரை தனியாக வைத்து என்னை தொடர்புபடுத்தி பல்வேறு கேள்வி கேட்டுள்ளனர். எனது ஓட்டுநரை தனிமைப்படுத்தி 5 நாட்கள் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளனர். எனது மனைவி, மகன்களிடம் மன உளைச்சல் ஏற்படும் வகையில் தொடர்ந்து கேள்விகள் கேட்டுள்ளனர்.
நான் தங்கியிருந்த, கல்லூரியில் இருக்கும் தங்கும் விடுதிகளில் சள்ளடை போட்டு சோதனை செய்தனர். என்னை தொடர்புபடுத்தி, விழுப்புரம், வந்தவாசி, கோவை, திருவண்ணாமலை பல இடத்திற்கு சென்று 5 நாட்களும் சோதனை செய்துள்ளனர். இப்போது கூட சோதனை செய்த அதிகாரிகள் மீது எனக்கு கோவம் வரவில்லை. இவர்கள் வெறும் அம்புதான். ஏற்கனவே 2021ம் ஆண்டு ஐ.டி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது எனது தேர்தல் வேலையை கெடுத்தார்கள். அதன் விளைவு என்ன 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய என்னை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தார்கள். முன்பைவிட இந்த முறை மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார்கள். அடிப்படையில் நான் ஒரு விவசாயிய வீட்டு பிள்ளை. அதற்கு பின்னால் திருவண்ணாமலைக்கு வந்தேன். அச்சகத்தை உருவாக்கினேன். அதற்கு பின்னால் லாரிகளை வாங்கி ஓட்டினேன். அதன் பிறகு சென்னைக்கு வந்து திரைப்படங்களை தயாரித்தேன். எங்களை முடக்குவதற்காகவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. எனக்கு தொடர்புடைய இடங்களில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை நாங்கள் சட்டப்படி நடந்துகொள்வோம்.
உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல பாஜகவில் ஒரு அணியாக வருமான வரித்துறை உள்ளது. எங்களை முடக்குவதற்காகவே இந்த சோதனை நடைபெற்றது. தனிப்பட்ட முறையில் என் பெயரை கலங்கப்படுத்த பல பேர் முயற்சி செய்கிறார்கள். அது எந்த காலத்திலும் நடக்காது. என்னை பொறுத்தவரை நான் நேர்மையானவனாக, எனது மனசாட்சிக்கு பயந்தவனாக எப்போதும் கட்டுப்பட்டு இருக்கிறேன். எந்த அறக்கட்டளையிலும் நான் பொறுப்பில் இல்லை” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“