scorecardresearch

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படம் : அமைச்சர் எ.வ வேலு

அன்னூரில் விவசாயிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படம் : அமைச்சர் எ.வ வேலு

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்.எ.வ.வேலு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெய்க்கா நிதியுதவியுடன் தரைத்தளத்தில் சேர்ந்து ஆறு தளங்களை கட்டுகின்ற புதிய கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த 2023 மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும்.கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த கட்ட பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது.தமிழக முதல்வரின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும்.

தீக்காயத்திற்கு என்று தனி பகுதி கட்டப்படுகிறது. 8 ஆப்ரேஷன் தியேட்டர்கள் மற்றும்  2 சிறு ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்படுகிறது.

அதேபோல மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க தார் சாலைகள் மருத்துவமனை முழுவதும் முதல்வரின் கவனத்தின் மூலம் அமைக்கப்படும்.

அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் சரி சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம்.

நிலம் கையகப்படுத்துவது சாலை அமைப்பது என்றால் யாருக்காக. நகரப் பகுதியில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கிறோம்.அரசு திட்டங்கள் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்.

அதேபோல அரசு திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை செய்து திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கை தான் நடைபெறும்.

அன்னூரில் விவசாயிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister eva velu about newsa roads tn govt

Best of Express