ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் தமிழகம் முழுவதும் நாளை நிறுத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது. 4.5% கொழுப்பு சத்து உள்ள பச்சை நிற பால் பாகெட்டை 40 % விற்பனை ஆகிறது. மற்ற தனியார் நிறுவனத்தின் 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ. 56 வரை விற்கப்படுகிறது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 1 லிட்டர் ரூ. 44-க்கு விற்கப்பட்டது. இந்த பாலில் உள்ள கொழுப்பை தயாரிக்க, வெளி மாநிலத்திலிருந்து வெண்ணை, பால் பவுடர் வாங்குவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் 3.5 % கொழுப்பு சத்து உள்ள delight’ பாலை அறிமுகம் செய்து, இதை அதே விலைக்கு விற்பனை செய்கிறது. தமிழகத்தின் பல இடங்களில் ஆவின் பச்சை நிற பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை முதல் விநியோகம் நிறுத்தபட உள்ளது.
பச்சை பால் பாக்கெட் நிறுத்தம் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது “ பச்சை நிறப் பாலில் சாதாரண பாலை வாங்கி, அதற்கு கூடுதலாக 1 % கொழுப்பை சேர்த்து ஆவின் தயாரித்து வந்தது. இன்றைக்கு இருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை பார்த்தால், கொழுப்பு தேவைப்படாத சாதாரண மக்களுக்கு, கொழுப்பை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. FSSAI தரத்தின் அடிப்பையில், சாதராண பாலில் 3.5 % மட்டுமே கொழுப்பு சத்து இருக்கும். இதனால் இதை கொடுக்க முடிவு செய்துள்ளோம் ” என்று அவர் கூறி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“