scorecardresearch

‘எங்களைப் பார்த்தால் சி.எம் சிரிப்பதே இல்லை; காரணம் இதுதான்’: அமைச்சர் காந்தி

மக்களுக்கு என்ன செய்யலாம் என மு.க. ஸ்டாலின் யோசித்துக் கொண்டே இருப்பதாக காதி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

Minister Gandhi said that Stalin was not laughing at us
முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்களைப் பார்த்து சிரிப்பது இல்லை என அமைச்சர் காந்தி கூறினார்.

தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடி நிலைமையிலும் நெசவு தொழிலாளர்களின் கூலியை உயர்த்திக் கொடுத்துள்ளது. இந்தத் துறை மட்டுமல்ல எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் பாரத்து பார்த்து செய்கிறார்.
இது சாதாரணம் அல்ல. தினமும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டே இருக்கிறார். அந்த அளவுக்கு மக்களின் உயர்வுக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்” என்றா்.

தொடர்ந்து, மு.க ஸ்டாலின் எங்களை பார்த்து கூட சிரிப்பது இல்லை என்றார்.

மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அங்கு நேற்று பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “சிங்கப்பூர் என் சிந்தைக்கு இதமான ஊர். தமிழ்நாட்டில் இருப்பது போல் உணர்கிறேன்” என்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜப்பானிலும் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister gandhi said that stalin was not laughing at us

Best of Express