/tamil-ie/media/media_files/uploads/2022/12/New-Project63.jpg)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்த தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் காரமடை அரங்கநாதர் கோயில், மாதேஸ்வரன் கோயிலில் வழிபாடு செய்தார். கார்த்திகை தீபத்தையொட்டி மாதேஸ்வரன் மலை கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். பின்னர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பெயர்களில் அர்ச்சனை செய்தார்.
தொடர்ந்து, கோவையில் பிரசித்தி பெற்ற வைணவ தளமான காரமடை அரங்கநாதர் கோயிலுக்கு சென்றும் வழிபட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-07-at-10.10.02-1.jpeg)
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான், "எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கார்த்திகை தீப திருநாளையொட்டி கோயில்களில் வழிபாடு செய்தேன். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் நலன் கருதி அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-07-at-10.10.01.jpeg)
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.