Advertisment

சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டுவிட்டார்... 2 மணி கனவு எப்படி பலிக்கிறது பார்ப்போம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டுவிட்டார், அவருடை 2 மணி கனவு எப்படி பலிக்கிறது பார்ப்போம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளர்.

author-image
WebDesk
New Update
Gingee Masthan Sarathkumar

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைத்தது தொடர்பாக கட்சிக்குள் சலசலப்பு எழுந்ததைத் தொடர்ந்து, ஊடகங்களில் விளக்கம் அளித்துப் பேசுகையில், 2 மணிக்கு கனவு கண்டதாகக் கூறியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டுவிட்டார், அவருடை 2 மணி கனவு எப்படி பலிக்கிறது பார்ப்போம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளர்.

Advertisment

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கை அமைச்சர் செஞ்சி மஸ்தான் புதன்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான் இடம், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து நடிகை குஷ்பூ  ‘பிச்சை’ என்று கூறியது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “1967 முதல் இன்று வரையில் 6வது முறையாக திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திருக்கிறது. ஒரு 30 ஆண்டுகள் காலம் செய்ய வேண்டிய பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர், மக்களின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்த 3 ஆண்டுகளில் அந்த சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஒவ்வொரு இல்லத்திலும் ஸ்டாலின் குரல் ஒலிக்கிறது. அனைத்து திட்டங்களும் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும்  என்ற திராவிட மாடல் தத்துவம், இன்றைக்கு இந்த 3 ஆண்டு கால சாதனைகள், 100 ஆண்டுகள் அல்ல 1000 ஆண்டுகள் பேசப்படும் சாதனைகளாக இருப்பதுதான் இந்த புகைப்படக் கண்காட்சி மூலமாக நாம் அறியமுடிகிறது. மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். தமிழகம் புதுவை உள்ளடங்கிய இந்திய திருநாட்டை ஸ்டாலின் பாதையில், எடுத்துச் செல்வதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள்.” என்று கூறினார். 

ஜாபர் சாதி விவகாரத்தில் முதல்வர் ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  “சட்டத்தை மதிப்பதுதான் தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கை. எனவே, சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும். சட்டரீதியாக எல்லாவற்றையும் சந்திக்க வேண்டும் என்பதுதான், முதலமைச்சருடைய விருப்பம்” என்று கூறினார்.

சரத்குமார் தனது கட்சியை பா.ஜ.க-வில் இணைத்தது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் கருத்து கேட்டர்னர். இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “அதுதான், அவர் இரவு 2 மணிக்கு கனவு கண்டாராமே, 2 மணி கனவு அது எப்படி பலிக்கிறது என்று பார்ப்போம். சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டுவிட்டார். சரத்குமார் தனிப்பட்ட முறையில் 2 மணிக்கு எழுந்திருப்பது, கனவு காண்பது, கேள்வி கேட்பது எல்லாம் தனிப்பட்ட முறை. இரவு பகல் பாராமல் படத்தில் நடித்துக்கொண்டிருப்பது போல, அவருடைய கனவு” என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் நகைச்சுவையாகக் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sarath Kumar Gingee Masthan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment