Advertisment

உக்ரைனில் இருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 1340 பேர் மீட்பு: அமைச்சர் மஸ்தான் தகவல்

உக்ரைனில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

author-image
WebDesk
New Update
உக்ரைனில் இருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 1340 பேர் மீட்பு: அமைச்சர் மஸ்தான் தகவல்

Minister Gingee Masthan says so far 1340 students arrived from Ukraine: உக்ரைனில் இருந்து இதுவரை 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Advertisment

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். இதில் உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு, உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு வருகிறது. தமிழக அரசு சார்பிலும், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின், இதற்காக எம்.பிக்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உக்ரைனில் இருந்து, இந்தியா திரும்பி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களை சந்தித்து பேசியது. மேலும் அவர்கள் சொந்த ஊர்கள் திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த தமிழக மருத்துவ மாணவ, மாணவிகள் 123 பேர் நேற்று இரவு 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை தமிழக அரசு சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் அவரவர் சொந்த ஊர்களுக்கு தமிழக அரசின் செலவில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதையும் படியுங்கள்: நெல்லையில் சந்திப்பு… உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ- மாணவிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்!

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டு வரும் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார். இதுவரை 1,340 தமிழக மாணவர்கள் அரசு சார்ந்து அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து சேர்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்களை அவர்களின் பெற்றோரிடம் சேர்ப்பது வரை துறை சார்ந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Ukraine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment