அயலாகத் தமிழர்களுக்கு பொங்கல் வைப்பது எப்படி என்று செய்து காட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சுவாரஸ்யமாக செய்து காட்டினார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழ் பாரம்பரிய பொங்கல் வைக்கும் முறை செஞ்சி மஸ்தான் இன்று அயலாக்க தமிழர்களுக்கு செய்து காட்டினார்.
விவரம் வருமாறு: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ரங்க பூபதி கல்லூரியில், "வேர்களைத் தேடி” திட்டத்தின்கீழ், செஞ்சிக்கோட்டையின் வரலாற்று சிறப்புகள் மற்றும் தமிழர்தம் பண்பாட்டினை அறிந்துகொள்வதற்காக வருகை புரிந்த அயலகத் தமிழர்களை "சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று (13.08.2024) வரவேற்றார். மேலும், அவர் தமிழர்தம் பாராம்பரிய திருவிழாவான பொங்கல் வைத்து, அயலகத்தமிழர்களுடன் கொண்டாடினார்.
உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன், அயலகத் தமிழர் நலன் ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“