விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். சமீபத்தில் திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்ர். அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்தார்.
மேலும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம சிகாமணி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், விக்கிவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து திமுக சார்பில் விக்கிரவாண்டி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் முன்னாள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் இடம்பெறவில்லை.
இதையடுத்து திமுக திட்டமிட்டு மஸ்தானை ஓரங்கட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
இந்த சூழலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் நியமனம் செய்து துரைமுருகன் அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“