தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்க கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் அறிமுகம் செய்து படிப்படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும், ஓவ்வொரு மாவட்டத்துக்கும் 10 கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இது குறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். 5 கிலோ மற்றும் 2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விற்பனை விரைவில் தொடங்கும்.
மக்களின் வசதிக்காக, நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.
அத்தியாவசியப் பொருள்களை வாங்க, நியாயவிலைக் கடைகளுக்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இல்லாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”