/indian-express-tamil/media/media_files/2025/08/16/minister-i-periyasamy-senthilkumar-ed-raid-2025-08-16-14-52-14.jpg)
Minister I Periyasamy Senthilkumar ED raid money laundering case
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது மகன் எம்.ஏ. செந்தில்குமாருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ. பெரியசாமியின் இல்லத்திலும், சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.
முன்னதாக காலை நேரத்தில், செந்தில் குமாரின் விடுதி அறை பூட்டப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அறைக்கு வெளியே காத்திருந்தனர். அறை திறக்கப்படாததால், அதிகாரிகள் பூட்டை உடைக்கத் திட்டமிட்டனர். இதையடுத்து, செந்தில் குமாரின் உதவியாளர் ஒருவரிடம் இருந்து மற்றொரு சாவியைப் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அறையின் பூட்டை உடைக்காமல், அறையின் உள்ளே சென்று சோதனையை நடத்தினர்.
இதையடுத்து விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக, சட்டசபை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே காலை முதல் இந்த சோதனை நடந்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக தலைமைச் தலைமை செயலகத்தில் உள்ள ஐ. பெரியசாமியின் அறையை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யலாம் என்பதால், முன்னெச்சரிக்கை காரணமாக தலைமைச் செயலக அதிகாரிகள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் அலுவலகக் கதவை பூட்டிவிட்டுச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.