முடிவுக்கு வந்த அதிமுக - பாஜக கூட்டணி குழப்பம்! 'இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு' - பொன்.ராதா

அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் என்னை சந்தித்து ஆதரவு கோரினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜ ஆதரவு அளிக்கிறது

அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் என்னை சந்தித்து ஆதரவு கோரினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜ ஆதரவு அளிக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister jayakumar met pon radhakrishnan bjp supports admk by election - 'இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு; அதிமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை' - பொன்.ராதாகிருஷ்ணன்

Minister jayakumar met pon radhakrishnan bjp supports admk by election - 'இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு; அதிமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை' - பொன்.ராதாகிருஷ்ணன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.

Advertisment

சில நாட்களுக்கு முன் அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து இடைத் தேர்தலுக்கு ஆதரவு கோரினர். ஆனால் முக்கிய கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவு கோராமல் இருந்தது. முன்னதாக, இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இடைத் தேர்தலுக்கு ஆதரவு கோராமல் அதிமுக இழுத்தடிக்க இந்த சந்தேகம் வலுத்தது.

பாஜக உடனான கூட்டணி தொடர்வதாக துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸும், அதிமுக உடனான கூட்டணி தொடர்வதாக பாஜக முக்கிய நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசனும் தெரிவித்து வந்த நிலையில், இன்று பாஜக அலுவலகம் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினார்.

Advertisment
Advertisements

இச்சந்திப்பிற்கு பின், நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "தமிழக பாஜ.,விற்கு தலைவர் இல்லாததால் மேலிட தலைமையிடம் அதிமுக ஆதரவு கோரியது. மேலும், அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் என்னை சந்தித்து ஆதரவு கோரினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜ ஆதரவு அளிக்கிறது.

அதிமுக வெற்றிக்காக பாஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாடுபடுவர். பிரசாரம் மேற்கொள்ளும் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் முறைப்படி வெளியிடப்படும். இரு தொகுதிகளிலும் திமுக, காங்., கட்சியை தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து பாஜ செயல்படும். அதிமுக, பாஜ சார்பில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதங்கள் எழுந்தன" என்று கூறியுள்ளார்.

Pon Radhakrishnan Minister Jayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: