ஜப்பானில் கவிதை ராமன்! அமைச்சர் ஜெயக்குமாரின் குறும்புக் கவிதை!

அமைச்சர் ஜெயக்குமார் மடியில் சிங்கக் குட்டி உள்ளது போன்று புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது

Latest Tamil News Live Updates
Latest Tamil News Live Updates : 7 பேட் விடுதலை குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் கவிதை : தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கண்காட்சியில் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கையும் திறந்துவைத்தார். பின்னர் அந்த நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஜப்பான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் மடியில் சிங்கக் குட்டி உள்ளது போன்று புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்திற்காக வைரல் ஆகவில்லை. அந்த படத்தை விளக்கி அமைச்சர் எழுதியுள்ள கவிதை தான் வைரலுக்கு காரணம்.

வீரமிகு தமிழ்நாட்டின்
தீரமிகு தமிழ்மகன்
சிங்கமென வந்ததை அறிந்த –
சிங்ககுட்டி ஒன்று
தந்தையென நினைத்து
தாவி அமர்ந்தது

என்று அமைச்சர் ஜெயக்குமார் எழுதியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister jayakumar wrote poem

Next Story
முன்பின் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்! – அண்ணா பல்கலைக்கழகம்anna university result, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com