Advertisment

கொரோனா தொற்று : மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடம்!

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

author-image
WebDesk
New Update
minister kamaraj corona admk minister

minister kamaraj corona admk minister

minister kamaraj corona admk minister : தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், இம்மாத தொடக்கத்தில் சொந்த ஊரான மன்னார்குடியில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு விழாவில் பங்கேற்றார். பின்னர், சென்னை திரும்பும் வழியில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதியன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக 7ஆம் தேதி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதே போல் அவருடைய உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்திருந்த நிலையில்,நேற்று காலை அமைச்சர் காமராஜூவுக்கு மூச்சுத்திணறல் மேலும் அதிகமானது. இதனால், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், எக்மோ சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு 8.15 மணி அளவில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் காமராஜ் கொண்டு செல்லப்பட்டார்.

அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.நேற்று இரவு 9.40 மணிக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனை வருகை தந்தார்.

முன்னதாக, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ், விரைந்து முழு நலன் பெற விழைகிறேன் என்று தெரிவித்த ஸ்டாலின், பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி தொண்டர்கள் மத்தியில், கட்சி தலைமை மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment