/tamil-ie/media/media_files/uploads/2022/12/New-Project44.jpg)
மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் 50 தன்னார்வலர்களுக்கு முதலுதவி பயிற்சி, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழக அரசு ரூ. 36 கோடி மதிப்பில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்களை அமைக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் 50 தன்னார்வலர்களுக்கு முதலுதவி பயிற்சி, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, பல்நோக்கு தங்குமிடங்கள் நிறுவப்பட்டுள்ள 121 கிராமங்களைச் சேர்ந்த 6,000 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையிலும் மானியக் கோரிக்கைகள் அறிவிப்புகள் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு நட்டப்பேரவையில் ஜூன் 24-ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த துறையின் மானியக் கோரிக்கையில் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வெப்ப அலைகள் இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்படும் என்றார். வெயிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தண்ணீர் பந்தல்கள், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு போன்ற அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
“சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நிரந்தர தங்குமிடங்களில் மீட்பு படகுகள் மற்றும் வாகனங்கள் முன்கூட்டியே இருக்கும். குடிநீர், பால், ரொட்டி போன்ற அத்தியாவசிய பொருட்கள் இந்த மையங்களில் இருப்பு வைக்கப்படும்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் மற்றும் தனியார் குடியிருப்புகளில் வசிக்கும் 500 தன்னார்வலர்களுக்கு ரூ. 2 கோடி செலவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான பயிற்சி அளிக்கும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.
பேரிடர் காலங்களில் மக்களை எச்சரிக்கும் முன் எச்சரிக்கை அமைப்புகள் ரூ. 13.25 கோடி செலவில் 1,000 இடங்களில் ஏற்படுத்தப்படும். வெள்ளம், நிலச்சரிவு, கடல் சீற்றம் மற்றும் பிற சமயங்களில் மக்களை எச்சரிக்கை அறிவிப்புக்கு அவை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
மேலும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவிக்கையில், “தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், மீன்வளம், மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எஃப்), பெருநகர சென்னை காவல்துறை மற்றும் கிரேட்டர் சென்னை மாநகராட்சி மூலம் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக படகுகள், மீட்பு வாகனங்கள் மற்றும் நவீன மீட்பு உபகரணங்களை ரூ. 105 கோடியில் தமிழக அரசு வாங்கும்” என்று கூறினார்.
வனத்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் காட்டுத் தீயை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, வனத்துறைக்கு ரூ. 15 கோடி செலவில் நவீன கருவிகள் மற்றும் வாகனங்கள் வழங்கப்படும். கடலோர மாவட்டங்களில் 4,960 மீனவர்கள் மற்றும் 225 மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பயிற்சி அளிக்கப்படும். கடந்த ஆண்டு பெய்த மழையால் மனிதர்கள் மற்றும் பொருள்கள் பாதிக்கப்பட்டதால், தூத்துக்குடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் நிறுவப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.