/indian-express-tamil/media/media_files/2025/03/25/tUjald0wxz9E7NsVG7RA.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, சட்டப்பேரவையில் இன்று (25.03.2025) நகராட்சி நிர்வாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துப் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. 1989ம் ஆண்டு நான் முதல் முதலில் அமைச்சராக பொறுப்பேற்றேன். அமைச்சராக எப்படி பணியாற்ற வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வழியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் எனக்கு பெரிய இலாகாவை ஒதுக்கியிருக்கிறார். இந்த பிறப்பு அவர்களுக்கான பிறப்பு என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஏற்றுக்கொண்ட பொறுப்பில் அமைச்சர்கள் சரியாக பணியாற்றி வருகின்றனர். தற்போது ரூ.17,455 கோடியில் 23 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 16 கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகம் மூடப்படவில்லை:
*அம்மா உணவகம் எங்கேயும் மூடப்படவில்லை. சென்னையில் பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் தான் உணவு அளிக்கப்படுகிறது. மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 530 எம்எல்டி நீர் வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது.
கழிவு நீர் கட்டமைப்புகள் புனரமைப்பு
கோடை காலத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சிங்கார சென்னை 2.0
சிங்கார சென்னை 2.0 மூலம் இதுவரை ரூ.966 கோடி மதிப்பீட்டில் 1048 வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டது. மெரினா கடற்கரை ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் ரூ.45 கோடியில் உள்விளையாட்டு அரங்கங்கள்
சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். சென்னையின் மையப்பகுதிகளில் உள்ள மிகவும் பழமையான கழிவு நீர் கட்டமைப்புகள் முதல் கட்டமாக ரூ.740 கோடியில் புனரமைக்கப்படும். சென்னை மாநகராட்சி பூங்காக்கள், பொது இடங்களில் ரூ.52 கோடியில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். சென்னை மாநகராட்சியில் ரூ.75 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
சென்னையில் மேலும் 30 பூங்காக்கள்
கே.என்.நேரு சென்னை மாநகராட்சியில் ரூ.60 கோடி மதிப்பில் மேலும் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாநகராட்சிகளில் ரூ.48 கோடியில் புதிய மண்டல அலுவலகங்கள் கட்டப்படும். பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்கள் ரூ.52.26 கோடியில் சீரமைக்கப்படும்.
பாதாள சாக்கடை அமைக்க ரூ.800 கோடி ஒதுக்கீடு
தாம்பரம், விருதுநகரில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க முதற்கட்டமாக ரூ.800 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் ரூ.200 கோடியில் நடைபாதைகள்
சென்னையில் 200 கி.மீ. நீளத்துக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்கப்படும். ரூ.95 கோடியில் ஓட்டேரி, விருகம்பாக்கம் கால்வாய்கள் தடுப்புச் சுவர் அமைத்து உயர்த்தப்படும். சென்னையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடியில் பூங்காக்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும்.” என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.