திருச்சி நிகழ்ச்சியில் கே.என்.நேரு: திடீரென சரிந்து விழுந்த 130 அடி கம்பம்; பரபரப்பு
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அருகில் இருந்த வாக்கி டாக்கி டவர் கம்பம் சரிந்து விழுந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அருகில் இருந்த வாக்கி டாக்கி டவர் கம்பம் சரிந்து விழுந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் கீழ் 1 சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனம், 15-வது நிதிக்குழு நிதியின் கீழ் 4 மழை நீர் வடிகால் தூர் வாரும் வாகனங்கள், 5 சிறிய ரக புதை வடிகால் அடைப்பு நீக்கும் வாகனங்கள் என மொத்தம் ரூபாய் 3.65 கோடி மதிப்பிலான 10 வாகனங்களை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து இன்று (ஏப்ரல்16) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென ஒரு சப்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் அருகில் சென்று பார்த்த போது திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி 2ஜி அலை கற்றுக்கான வயர்லெஸ் டவர் கம்பம் சரிந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பிகள் மீதும் அருகிலுள்ள ட்ரான்ஸ் பார்மர் மீதும் விழுந்திருந்தது.
இதையடுத்து உடனடியாக அமைச்சர் பாதுகாவலர்கள், போலீசார் சாலை நடுவே தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் அவ்வழி செல்லாத படி முன்னெச்சரிக்கை செய்தனர். 130 அடி உயரம் உள்ள அந்த வயலர்ஸ் டவர் முறிந்து கீழே விழுந்தபோது, மின்மாற்றின் அருகில் இருந்த மின் கம்பிகளுக்கிடையே டவரின் உடைந்த பகுதிகள் சிக்கிக் கொண்டன. இதனால் ஒத்தக்கடை, கண்டோண்மெண்ட் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடைந்த டவரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் வருகையும், மாநகராட்சி பணியாளர்கள் வருகையும் இல்லாததால் அதம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil