திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கதிரவன் அண்ணாமலை மணிராஜ். தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும்.
திருச்சி மண்டலத்தில் 41 தொகுதிகள் உள்ளது, தற்போதைய சூழலில் 41 தொகுதிகளிலும் திமுக தான் முழுமையாக வெற்றி பெறும் என்கிற நிலை உள்ளது. கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உள்ள பிரச்சனைகள், தொகுதியில் நிலவும் பிரச்சனைகள், கூட்டணி கட்சியினரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அனைத்தும் சரி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மதுரையில் விஜய்யை முதல்வர் என அச்சடித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
100 ரூபாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் போஸ்டர் ஓட்டலாம். திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதை மேலும் மெருகேற்றும் வகையில் அனைத்து இடங்களிலும் நிர்வாகிகளை அழைத்து நாங்கள் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்றார்.
க.சண்முகவடிவேல்