Advertisment

முதல்வர் என்னை கூப்பிட்டு திட்டுவார் : ஆளுனர் குறித்த கேள்விக்கு கே.என்.நேரு பதில்

நாளை மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

author-image
WebDesk
New Update
KN Nehru

கே.என.நேரு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கூட்டாக இணைந்து வழங்கினர்.

Advertisment

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினர்.

publive-image

இதே போல் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் ரூபாய் 47 லட்சத்து 19,000 செலவில் குப்பை அள்ளும் வாகனங்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்துள்ள பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர் பாம்பு கடித்து இறந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் 1 லட்சத்தை அமைச்சர்கள் வழங்கினர்.

தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் பொதுமக்கள் மனுக்கள் வழங்க வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ரூபாய் 4 லட்சம் 79 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் வாகனத்தையும் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் திருச்சி மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவி சங்கத்திற்கு ரூ. 5,25,000 நத்திட்டங்களை வழங்கினர்.

publive-image

மொத்தமாக ஒரு கோடியே 8 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்களை இன்று வழங்கினர். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜீத்குமார், மேயர் அன்பழகன்,  மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,

நாளை மறுநாள் தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து பூலையாறு, புள்ளம்பாடி பகுதியில் உள்ள நந்தியாறு ஆகியவற்றை பார்வையிட்டு பின்னர் திருச்சிக்கு வருகிறார். தொடர்ந்து விமானம் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கவர்னர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இது தேவையா? முதல்வர் என்னை கூப்பிட்டு திட்டுவார் என நகைச்சுவையாக பேசிவிட்டு கடந்து சென்றார்.

க.சண்முகவடிவேல்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

K N Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment