Advertisment

அடுத்த இரு தினங்கள் இங்கு செல்ல வேண்டாம்: அமைச்சர் கே.என். நேரு

மிக் ஜாம் புயல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், “அடுத்து வரும் 2 நாள்களுக்கு மக்கள் இந்த இந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என கோரிக்கையாக வைக்கிறோம்” என அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இன்று (டிச.2) கூறினார்.

author-image
WebDesk
New Update
MK Stalin KN Nehru

அடுத்த இரு தினங்கள் கடற்கரை சாலைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அமைச்சர் கேஎன் நேரு கூறினார்.

தமிழக அமைச்சர் கே.என். நேரு சென்னையில் சனிக்கிழமை (டிச.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சென்னையில் கனமழை பெய்துள்ளது. மிக்ஜாம் புயல் எச்சரிக்கை உள்ளது. இதுமட்டுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இதனால் சில இடங்களில் நீர் வடியவில்லை. இதனால் சில மோட்டர் பம்புகள் வைத்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இன்று மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பல்வேறு இடங்களில் தேவையான இயந்திரங்கள் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபடியான பாதிப்பு ஏற்பட்டால் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.

அடிப்படை தேவைகளான உணவு, உடை தயார் நிலையில் உள்ளன. தண்ணீர் தேங்கிய இடங்கள் 1, 2 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் 2வது இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

90 இடங்களில் மோட்டர் பம்புகள் ரெடியாக உள்ளன. எனவே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்களின் கோரிக்கை என்னவென்றால், அடுத்த இரு தினங்கள் கடற்கரை சாலை மற்றும பூங்காக்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.

இதை எங்களின் கோரிக்கையாக வைக்கிறோம் நாளை (டிச.3) மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

K N Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment