Advertisment

தமிழகத்தில்தான் மிகக் குறைவான வரி வசூல்: அமைச்சர் கே.என்.நேரு

7 லட்சம் மக்களுக்கு ( குடும்பம் ) மட்டும் தான் 100% வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான்.

author-image
WebDesk
New Update
Minister KN Nehru said that the least amount of tax is collected in Tamil Nadu

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் தான் மிகக் குறைவான வரி வசூலிப்பு நடைபெற்று வருவதாக அமைச்சர் கே என் நேரு திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சி, கரூர், அரியலூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற தேவைகள் குறித்து உடனடி தேவை என்ன என்பது குறித்து கேட்டறிந்தோம்.

முதல்வரிடம் விவரங்களை கூறி பரிசீலனை செய்து உரிய நிதியை பெற்றுத் தருவோம். குடிநீர் திட்டத்தை பொறுத்தவரை திருச்சி தொட்டியம் பகுதியில் 49.35 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

துறையூர் கோம்பை 75 லட்சம் மதீப்பிட்டில் குடிநீர் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. இது போன்ற எண்ணற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடி குடும்பம் இருக்கிறார்கள் – இதில் 1கோடி 75 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

7 லட்சம் மக்களுக்கு ( குடும்பம் ) மட்டும் தான் 100% வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான்.

மற்ற மாநிலத்தில் மிக மிக அதிகம். தமிழகத்தில் 2 ஆயிரம் வரி என்றால் மகாராஷ்டிராவில் 12 ஆயிரம் ரூபாய் வரை வரி வசூலிக்கப்படுகிறது என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu K N Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment