குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: அமைச்சர் வெளியிட்ட அப்டேட்

தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்

திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. 

தற்போது, திமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள்  நிறைவடைந்துள்ள நிலையில், அத்திட்டத்தைச் செயல்படுத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மறுபுறம், மக்களும் ரூ.1000 ஆயிரம் எப்போது கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்

இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கு திட்டம் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான முறையில் நடத்தினார்களா?; தற்போது நடைபெற்றதை விட நேர்மையாகத் தேர்தலை நடத்த முடியாது” என்றார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister kn nehru says 1000 rupees scheme will give women soon

Next Story
இரவில் கைது; போலீஸ் நிலையத்தில் படுத்து தூங்கிய பொன்னார்: பல இடங்களில் பாஜக மறியல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com