“எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. தி.மு.க கூட்டணியில் புகைச்சல் இல்லை, எங்கும் புகை வரவில்லை. எங்கள் கூட்டணி சுமூகமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள்” என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/26/tr-5-2025-06-26-07-52-29.jpeg)
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளின் பாகநிலை முகவர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/26/tr-4-2025-06-26-07-52-29.jpeg)
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கவின் பாக முகவர்கள் கூட்டத்திற்கு தலைமை ஏற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "பா.ஜ.க-வினர் வாக்கு இயந்திரத்திலும் மோசடி செய்ய கூடிய வகையில் வந்து விட்டார்கள் என ராகுல் காந்தி கூறி வருகிறார். அந்த மோசடி செய்வதை நாம் முறியடிக்க வேண்டும். நம்மை தேர்தல் களத்திற்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதய சூரியனாக இருக்கட்டும்" என்றார்.
பாக முகவர்கள் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேரு பேசியதாவது; முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணியை அன்போடு அரவணைத்து சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். எதிரே சேர்ந்துள்ள கூட்டணியை பொருத்தவரை, அமித்ஷா முதலில் தனி அமைச்சரவை என கூறி விட்டு மதுரைக்கு வந்தபோது கூட்டணி ஆட்சி என்கிறார். இதனால் தொண்டர்கள் சோர்வடைந்து விட்டனர். நம்முடைய கூட்டணி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாக உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நம் கூட்டணி கடந்த தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் தேர்தல் பணியாற்றி வெற்றிப்பெறுவோம்.
முருகன் மாநாட்டில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா இழிவுபடுத்தப்பட்டார்கள். அதை பார்த்து தி.மு.க கொந்தளித்த பிறகு, அ.தி.மு.கவினர் கண்டன அறிக்கை விட்டார்கள். இந்த நிலையில் தான் அ.தி.மு.கவினர் இருக்கிறார்கள் என்றார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/26/tr-1-2025-06-26-07-52-29.jpeg)
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. தி.மு.க கூட்டணியில் புகைச்சல் இல்லை, எங்கும் புகை வரவில்லை. எங்கள் கூட்டணி சுமூகமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை இருந்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து தி.மு.க தலைவர் முடிவெடுப்பார்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநகர தி.மு.க செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பார்வையாளர்கள் கதிரவன், மணிராஜ், மருத்துவர் அண்ணாமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில நிர்வாகி செந்தில் மற்றும் பாக முகவர்கள், தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்