திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவுக்கு தலைமை தாங்கி அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
இளைஞரணி செயலாளராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக என ஏராளமான முறை திருச்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கிய நிகழ்ச்சி திருச்சி
இதையும் படியுங்கள்: துணை முதல்வர் பதவிக்கு நிகரான பொறுப்பில் உதயநிதி: அன்பில் மகேஷ் பேச்சு
தொடர்ந்து, இன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின்,
இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், திருச்சிக்கென புதிய பேருந்து நிலையம், அறநிலையத்துறை மூலம் கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஈரடுக்கு மேம்பால சாலை வர உள்ளது. அது சிந்தாமணியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக புதிய பஸ் நிலையம் வரை வர உள்ளது.
புதிய பாலங்கள், முசிறியில் குடிநீர் திட்டங்கள், புதுக்கோட்டையில் குடிநீர் திட்டங்கள், அரசு அலுவலகங்கள் என எண்ணற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் திருச்சியில் பொழுகுபோக்கு இல்லாத காரணத்தால், வனத்துறை மூலம் வனவிலங்கு காட்சி சாலை அமைப்பதற்கான முயற்சியும் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான திருச்சியில், அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil