திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து துவக்கி வைத்தனர்.
இதையும் படியுங்கள்: தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.318 கோடி பெற்ற தி.மு.க; இந்தியாவின் பணக்கார மாநிலக் கட்சி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு தெரிவித்ததாவது;
20 மாத காலம் அரசு சார்பில் கொண்டு வந்த திட்டங்கள் மட்டும் செயல்பாடுகள் குறித்து விளக்க கண்காட்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிறைய நிதி வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் நேற்று பிரதமரிடம் வலியுறுத்தியதை பார்த்து இருப்பீர்கள். ஆளுநருடைய பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கையின் வாயிலாக பதில் அளித்து விட்டார், அதைப்பற்றி நான் ஏதும் கூற முடியாது. ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் நேரடியாகவே தெரிவித்து விட்டார்.
அரிஸ்டோ மேம்பாலம் அடுத்த வாரம் துவக்கி வைக்க உள்ளோம். டி.பி.ஆர்.,க்காக காத்து கொண்டுள்ளோம். பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் வே சாலைக்கும், திருச்சியில் டைட்டல் பார்க்குக்கும் ஏற்பாடுகள் செய்ய விருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை உடனடியாக அதற்கு கொடுக்க உள்ளோம். டைட்டல் பார்க்க போன்ற எண்ணற்ற திட்டங்கள் வர உள்ளாதால் திருவெறும்பூர் – அசூர் வரை அரை அடி கூட வாங்க முடியாத அளவிற்கு அந்த பகுதி டெவலப் ஆக உள்ளது. வருங்காலத்தில் திருச்சி ஒரு மிகப்பெரிய ஹப்பாக மாற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், துணை மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.