கோவை வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை, அத்துறையின் அமைச்சர் கேஎன்.நேரு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் 11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
மேலும் 67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 32.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/5x0lIakHAMLHrPsOUqt2.jpeg)
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது;
கோவை மாநகரில் நாள் ஒன்றுக்கு 298 mlt குடிநீர் தேவை. ஆனால் 214 mlt தண்ணீர் தான் கிடைத்து வருகிறது. பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறப்போகிறது. இத்திட்டத்தின் மூலம் 188 mlt தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்.
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும்
மேலும் சிறுவாணி, ஆழியார் அணைகள் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர், கேரள அரசுடன் கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கோவை மாநகரில் 280 கி.மீட்டருக்கு சாலைகளை சீரமைக்க பணம் ஒதுக்கி உள்ளோம், என்றார்.
/indian-express-tamil/media/media_files/9f7XZvG8zpYbrJEUgFaP.jpeg)
மேலும், உத்தர பிரதேச சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் உதயநிதி தலையை சீவ முடியுமா?.தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும்.
நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம் இவர்கள் புதிதாக ஆரம்பித்துள்ளார்கள் - பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் நாங்கள் எப்போதும் போல ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத காரியம், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை நாடாளுமன்ற உறுப்பினர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“