Advertisment

கோவைக்குச் சென்றால் எந்த நோயும் போய்விடும்: அமைச்சர் மா.சுப்ரமணியம்

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ளப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை கடந்த 20 ஆண்டுகளாக ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் நீரிழிவு மையம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

author-image
WebDesk
New Update
Minister M Subramaniam said that if you go to Coimbatore any disease will go away

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், "உடல் பருமன் - சந்தேகங்கள், தீர்வுகள்" புத்தகத்தின் 2"ம் பதிப்பை வெளியிட்டார்.

coimbatore | ma-subramanian | கோவை ஒரு மருத்துவ நகரமாக வளர்ந்து இருக்கிறது என்றும் கோவைக்குச் சென்றால் அனைத்து விதமான நோயும் தீர்ந்துவிடும் என்ற நிலை தற்போது உள்ளதாகவும் ஜெம் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பேசினார்.

Advertisment

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ளப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை கடந்த 20 ஆண்டுகளாக ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் நீரிழிவு மையம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த பிரிவின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

மேலும் அவர் ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேலு மற்றும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மற்றும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் பிரவீன் ராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டுக்கும் மருந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கும் நவீன  'ஓபிசிட்டி கியூர், டயாபீடிஸ் கியூர்' என்ற மையங்களை தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து பழனிவேலு எழுதிய  "உடல் பருமன் - சந்தேகங்கள், தீர்வுகள்" புத்தகத்தின் 2"ம் பதிப்பை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியம் பேசுகையில், “உடல் பருமன் அதிக உணவு உண்ணுதாலால் அல்லது குறைவான உடல் உழைப்பு காரணமாக ஏற்படுவதல்ல என்பதை இம்மருத்துவமனை மருத்துவர் பிரவீன் ராஜ் தெளிவாக கூறியுள்ளார் 

சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம், எடை மேலாண்மை உள்ளிட்டவை நீரிழிவு நோயின் முக்கிய காரணிகளாகும். எனக்கும் இந்த நோயின் பாதிப்பு உள்ளது. நான் தினமும் சுமார் 10 கிலோ மீட்டர் நடைபயிற்சி மேற்கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகவே நான் 76 கிலோ எடையிலேயே இருக்கிறேன். 

தமிழத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். கோவையில் ரேஸ்கோர்ஸ் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டது. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. நடப்பதால் பல்வேறு பலன்கள் உள்ளன. 

இது ஓரளவுக்கு எடையை குறைக்கும். மருத்துவர் பழனிவேல் எடைகுறைப்புக்கான அறுவை சிகிச்சையை இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கினார். இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து பல்வேறு சிகிச்சைகளையும், மருத்துவர்களுக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். 

ஜெம் மருத்துவமனையின் சேவை அரசு மருத்துவமனைக்கும் தொடர வேண்டும். அதற்கான ஒப்பந்தம் செய்ய முன்வர வேண்டும். அரசு அதாவது மருத்துவமனையிலும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும். 

அரசு மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பின் மூலமாக ரூ.90 கோடி மதிப்பில் ஈரோட்டில் புற்று நோய் மையம் உருவாகி வருகிறது.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை அரசு மருத்துவமனையில் கேன்சர் ரோபோட்டிக் எக்யூப்மெண்ட் என்ற அதி நவீன இயந்தியம் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. 

பல்வேறு அதி நவீன மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் பொருத்தி ஏழை மக்களுக்கு நவீன சிகிச்சைகளை வழங்கி வருகிறோம்.

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கே முன்னுதாரணமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கோவை ஒரு மருத்துவ நகரமாக விளங்கி வருகிறது. வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். 

ஓய்வுக்கு பின் கோவைக்கு சென்று தங்கிவிட பலரும் ஆசைப்படுவார்கள். அதேபோல் எந்த நோய் என்றாலும் கோவைக்கு சென்றால் போய்விடும் என்ற நிலை தற்போது உள்ளது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் சரவணகுமார், சி.ஓ.ஓ பார்த்த சாரதி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Coimbatore Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment