வருகின்ற ஜூலை 4ஆம் தேதி, உதவி பேராசிரியர்களை இணை பேராசிரியர்களாக பணி உயர்த்தும் கலந்தாய்வு தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு குறித்த வழக்கின் விசாரணை வருகின்ற ஜூலை 6ஆம் தேதி வருகிறது, இருந்தாலும் முன்கூட்டியே வருகின்ற ஜூலை 4ஆம் தேதி கலந்தாய்வு திட்டமிடப்பட்டுள்ளது.
இதைப்பற்றி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, "அரசு மற்றவர்களுக்கு உதவுவதில் ஒருபோதும் தாமதிக்காது; அது பணி உயர்வு தருவதாக இருந்தாலும், இடமாற்றங்கள் செய்கின்ற விஷயங்களாக இருந்தாலும், சரியான நேரத்தில் ஆலோசனை தொடங்குகின்ற வகையில் இந்த கருத்து இருக்குமானால் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்", என்றார்.
மேலும், பேசிய அவர், தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு 5 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil