Chennai Tamil News: சென்னை சைதாப்பேட்டையில் 230 கோடி ரூபாய் செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுவருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஓமந்தூரார் மருத்துவமனை போல சைதாப்பேட்டையில் கட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு முறை உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களை பெரியார் மேற்கொண்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். இதை தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், இந்த பட்டியலில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.
இதையடுத்து, கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையானது இந்தியாவின் 2-வது முதியவர்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ரூ.230 கோடி செலவில் புதிய பன்னோக்கு மருத்துவமனை சைதாப்பேட்டையில் அமைய இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், காந்தி மண்டபத்தை புதுப்பிக்க ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருப்பதை தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil