Advertisment

ஆளுநரின் விமர்சனத்திற்கு பதிலளித்த அமைச்சர் மா.சு.

"தமிழக அரசின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்கின்றனர்" - அமைச்சர் மா.சு.

author-image
WebDesk
New Update
Minister M Subramanian

சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 'அண்ணா சாலை' பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார்.

Advertisment

மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- "தமிழக அரசின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மாநில அரசின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும். வெளிநாடு முதலீடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை.

3 மருத்துக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளோம். இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது. இந்தியாவிலேயே மாநில அரசு நடத்தும் கல்லூரிகளில் சென்னை மருத்துவ கல்லூரி தான் முதலிடம் பெற்றுள்ளது. எந்த மாநில அரசு மருத்துவகல்லூரியும் முதல் 11 இடங்களில் வரவில்லை. மருத்துவ கல்லூரிக்ளுக்கான தேசிய தரவரிசையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை 11-வது இடத்தில் உள்ளது", என்று கூறினார்.

மேலும், சிதம்பரம் தீட்சிதர் விவகாரம் குறித்து பேசியாக அவர், இது ஒரு குழந்தையின் எதிர்கால விஷயம் தொடர்ந்து பேசினால் நன்றாக இருக்காது. சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகள் திருமண காலத்தில் விமர்சனம் செய்யாமல் முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Ma Subramanian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment