Corona Precautions: புத்தாண்டு வருவதற்கு ஒரு வாரம் உள்ள நிலையில், பல நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் மக்களை உற்சாகத்துடன் வைத்திருக்கிறது. இந்த சமயத்தில் கொரோனா பரவி வரும் நிலை இருப்பதால், மக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகிறார்.
அவர் பேசியதாவது, "அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தப்படுவதும், தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்தில் உறுதி படுத்தப்படுவதற்குமான வழிகாட்டுதல், துறையின் செயலாளர் மூலம் இப்போது விடுக்கப்படுகிறது.
புத்தாண்டு, சமய விழாக்கள், அல்லது அரசியல் காட்சிகள் நடத்துகிற எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், எதற்கும் கட்டுப்பாடுகள் என்பது இல்லை.
அதே நேரத்தில், சுய கட்டுப்பாடுகள் அவரவர்களுக்கு வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்று. எந்த விழாவாக இருந்தாலும் நாம் மகிழ்ச்சியில் திழைப்பதற்குத் தான் அந்த விழாவை கொண்டாடுகிறோம்.
எந்த நிகழ்வாக இருந்தாலும் நம் மனதை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்குத் தான் அந்நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
மனது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், உடல் நலம் நல்ல திடகாத்திரத்துடன் இருக்க வேண்டும். உடல் நல்ல திடகாத்திரத்துடன் இருக்க வேண்டும் என்றால், முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர் உபயோகித்துக் கொள்ள வேண்டும், தனி மனித இடைவேளியை கடைபிடிக்க வேண்டும்.
இது எல்லாமே, கொரோனா விதிமுறைகளில் தொடர்ந்து கூறப்படுவதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் விதிக்கப்பட்ட இந்த விதிமுறைகளை இதுவரை அவை தளர்த்தப்படவில்லை.
எனவே, அது இப்போது நடைமுறையில் இருக்கிறது. இப்போது தேவை என்று கருதப்படுகிறது. எந்த நிகழ்ச்சி நடக்க இருந்தாலும், இந்த விதிமுறைகளை சரியாக கடைபிடித்தால், அவர்களுக்கும் நல்லது, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது", என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil