பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்

பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் ஃபேஸ்பு மற்றும் சமூக வலை தளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

do not take without doctors advise steam inhalation, covid 19, coronavirus, minister ma subramanian, அமைச்சர் மா சுப்ரமணியன், ma subramanian statement, tamil nadu

பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் ஃபேஸ்பு மற்றும் சமூக வலை தளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதே போல, உயிரிழப்புகளும் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு சார்பில் சித்தா கோவிட் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர், அறிகுறி உள்ளவர்கள் ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வருகிற வீடியோக்களைப் பார்த்து மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல், ஆவி பிடித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களுடைய நுரையீரல் மேலும் பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான, நிலையில் உள்ள நோயாளிகள் அரசு மருத்துமனை மருத்துவர்களின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வருகிற புகைபோடுதல் என்ற ஒன்றை பொதுமக்கள் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மருத்துவம் அம்ற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொது மக்கள் தாங்களாகவே சுய வைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் தவறாகும். அவ்வாறான சிகிச்சை முறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அழுத்தமான காற்று புகை போடுதல் என்ற ஒன்று தற்போது பொதுமக்களிடையே பரவி வருகிறது. இந்த புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று அவர்களின் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்கள் வாயை திறந்து புகையை பிடிக்கும் போது வைரஸ் கிருமியானது அருகில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இது மருத்துவ நெறிமுறைகளின்படி இதனை மருத்துவ சிகிச்சையாக கருத முடியாது. நோய் தொற்று ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டுமுறை வைத்தியம் செய்வதை விட்டு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக முழுவதும் கோவிட் நோயாளிகளுக்காக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த கோவிட் வைரஸ் என்பது புதுமையான நோயாகாவும் இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் தன்மை உடையதாக இருப்பதாலும் மருத்துவருடைய அறிவுரை இல்லாமல் புகை போடுதல் என்பதை பயன்படுத்தக் கூடாது.

சித்தா கோவிட் கேர் மையத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ முறையானது மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மாநில அரசு மருத்துவ குழு ஒன்று அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி உள்மருந்து மற்றும் பிர மருத்துவ முறைகளை கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister ma subramanian advising against the use of steam inhalation without doctors advice

Next Story
முதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com