Tamil Nadu News: தமிழகத்தில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி) அன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் பரவி வரும் காய்ச்சலின் காரணமாக மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். மருத்துவ துறையை சார்ந்தவர்கள், காய்ச்சலால் அவதிப்படும் மக்களை மூன்று அல்லது நான்கு நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்று அறிவுறுத்துகின்றனர்.

செப்டம்பர் 30ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்று மத்திய அரசு அறிவித்தபின்பு, தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முடிவுற்ற சேவைகளையும் அதற்கேற்ற கட்டிடப்பணிகளையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மேலும், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சமீப காலத்தில் தமிழகம் முழுவதும் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மூன்று நாட்கள் அவதி படுகின்றனர், இது பருவநிலை மாற்றத்தால் வருகிறது. மேலும், இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும். எங்கெல்லாம் காய்ச்சல் அதிகமாக பரவுகிறதோ அங்கெல்லாம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.
வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்று மத்திய அரசு அறிவித்தபின் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25ஆம் தேதி), 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார சுகாதார நிலையங்கள் என 1,133 மருத்துவமையங்களில் தடுப்பூசி போடும் பணி வருகின்ற புதன்கிழமை நடைபெறும்.
வருகிற அக்டோபர் 4ஆம் தேதி, 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.
தமிழகத்தில் 96% மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 91% மக்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது”, என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil