தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவத் திட்டங்களுக்கு ரூ.3000 கோடியில் மதிப்பீடு தாயார் செய்துள்ளோம் என்றும் இதற்காக ரூ,3000 கோடி கடனுதவி பெற நாளை அமெரிக்கா செல்கிறேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரை மும்மூரமாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது உலக வங்கியில் கடனுதவி பெறுவது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ” தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள மருத்துவத் திட்டங்களுக்கு ரூ.3000 கோடியில் மதிப்பீடு தாயார் செய்துள்ளோம். எனவே இதற்காக ரூ,3000 கோடி கடனுதவி பெற நாளை அமெரிக்கா செல்கிறேன். தமிழகத்தில் மருத்துவத்துறை திட்டங்களைச் செயல்படுத்த உலக வங்கியில் ரூ.3,000 கோடி கடனுதவி கேட்க உள்ளேன். அதோடு ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக பேச உள்ளேன் ” என்று நேற்றைய தினத்தில் பேசி உள்ளார்.