மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற மக்களின் உடல் நலன் சாா்ந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய அளவில் 75 நகரங்களைச் சேர்ந்த தலைவா்கள், பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ, ஆணையா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். இணையதளத்தின் வாயிலாகப் பதிவு செய்த நபா்களின் நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் இணையத்தின் வழியே கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நடைபயிற்சி, ஓட்டப்பந்தயம், மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற போட்டிகளில் 75 நகரங்களைச் சோ்ந்த 297 தலைவா்களும், பல்வேறு நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலா்கள், அரசு ஆணையா்கள் 56 போ் பதிவு செய்தனா். இதில், நடைபயிற்சி, ஓட்டப்பந்தயம், மிதிவண்டி ஓட்டுதல் ஆகிய போட்டிகளில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் 390 கி.மீ. ஓடி முதலிடத்தைப் பிடித்தார் ஆணையாளா்களுக்கான நடைபயிற்சி போட்டியில் பெருநகரசென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி ஐந்தாம் இடத்தைப் பிடித்தார்.
இந்திய அளவில் மிதிவண்டி ஓட்டுதல் போட்டி, அதற்கு பதிவு செய்தவா்கள் எண்ணிக்கையில் முதல் இடத்தை 1,059 போ் பதிவு செய்து அதிலும் முதல் இடத்தை சென்னை பிடித்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"