தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து திமுக மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அநாகரீகமாக பேசியதற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற செயல்களை ஆதரிக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை கலைஞர் கணினி கல்வியகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "திமுக மேடையில் யாரேனும் அநாகரீகமாக பேசினால், அது போன்ற செயல்களை முதல்வர் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்.
ஒரு பேச்சாளர் இப்படி அநாகரீகமாக பேசியதற்கு ஆளுநர் மாளிகையில் புகார் எழுந்துள்ளது. மற்ற காட்சிகளில் உள்ள பேச்சாளர்கள் 100 சதவீதம் அநாகரீகமாக பேசினாலும், அவர்களை அந்தந்த கட்சியினர் கண்டிப்பது இல்லை.
ஆனால், ஆளுநர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதற்கு இவ்வளவு விளம்பரம் தேவையா என்று தெரியவில்லை", என்று கூறியுள்ளார்.