சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரசு திட்டங்களை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தார்.
மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை துறையின் கட்டிடத்தின் லிப்டில் அவர் பயணித்தபோது பழுதாகி இயக்கம் தடைபட்டது. அமைச்சருடன் மருத்துவர்களும் உடன் சென்றும், செய்வதறியாது தவித்தனர்.
லிப்டின் ஆபத்து கால கதவின் வழியாக ஊழியர்கள் அவரை அங்கிருந்த வெளியே வர உதவினார்கள். அமைச்சரும் மருத்துவர்களும் வரிசையாக கீழே இறங்கினார்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அடிக்கடி மருத்துவமனையில் இருக்கும் லிப்ட் பழுதாகி விடுவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் மீட்கப்படுகின்றனர்.
ஊழியர்கள் இதை உரிய முறையில் பராமரிக்காததால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், திருச்சி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகிய இடங்களில் பழுதான பழைய லிஃப்ட்கள் மாற்றப்படும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil