Minister Ma Subramanian says 15-18 age group vaccination starts from Jan 3 in Tamilnadu: தமிழ்நாட்டில் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்குவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது;
நாளை முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்க்ளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. மொத்தம் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. தடுப்பூசி போடும் பணியை நாளை சைதாப்பேட்டை பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 10-ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது. 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மத்திய பூஸ்டர் டோஸூக்கான வழிகாட்டுதல்களை அறித்தவுடன், அதற்கேற்ப தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும்.
ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது. தமிழகத்தல் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3-ம் அலையாக பரவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”