கோவை தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அங்கு சென்றார். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் அதிகாரிகளுடன் அவர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
கோவை குனியமுத்தூர், உக்கடம், மதுக்கரை, புல்லுக்காடு, கரும்புக்கடை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஒரு சில இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவர் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் நடத்திய ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“