அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால்... அண்ணாமலையை கிண்டல் செய்த அமைச்சர் மா.சு

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்து மாவு டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்” என்று கிண்டல் செய்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்து மாவு டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்” என்று கிண்டல் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ma subramaniyan, annamalai, dmk, bjp, nutrition powder scam complaints, அண்ணாமலை, பாஜக, திமுக, மா சுப்பிரமணியன், கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து

தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்து மாவு டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன், ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்” என்று கிண்டல் செய்துள்ளார்.

Advertisment

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசில், மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி வந்தார். மேலும், திமுக அரசில் நடந்த ஊழல்களின் பட்டியலை வெளியிடுவதாக கூயிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், “அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார்.

Advertisment
Advertisements

முறைகேடு நடந்து இருந்தால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், அவர் மற்ற துறைகளின் கூறி வரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.

டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது. நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் திறக்கப்பட உள்ளது. தவறு நடைபெற்றுள்ளது என நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Ma Subramanian 2 Tamilnadu Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: