கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாடி திருவிழா இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தார்.
இந்தக் காற்றாடி திருவிழாவில், தைவான், மலேஷியா போன்ற வெளி நாட்டவர்களும் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ் வாழ்க” என்ற காற்றாடியை பறக்க விட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராகுல் காந்தியின் 2 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு வரவேற்கதக்கது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு கவுண்ட் டவுண் தொடங்கிவிட்டது. ஜெயபிரகாஷ் நாராயண் போன்றோர் போற்றி காத்த ஜனநாயக பாதையில் மீண்டும் நாம் பயணப்பட போகிறோம்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“