அம்பத்தூர் பால் பண்ணைக்கு கொண்டு வரப்படும் பால் டேங்கர் லாரியின் மேலே ஏறி பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது, டேங்கர் லாரிக்கு போடப்பட்ட சீல் முறையாக உள்ளதா எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து, பால் பதப்படுத்தப்படும் பிரிவுக்கு சென்றார்.
அங்கு, தர கட்டுப்பாட்டு பிரிவு, பால் குளிரூட்டும் பிரிவு, பாலித்தீன் பைகளில் பேக்கிங் செய்யப்படும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும், பால் டப்களை சுத்திகரிக்கும் பகுதி, ஆவின் சந்தாதாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பால் கொண்டு செல்லும் வாகனங்களையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் கணினியில் உள்ள பில்களை ஆய்வு செய்தார். அமைச்சரின் ஆய்வால் பரபரப்பு நிலவியது. மேலும் ஆவின் பால்பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விநியோக சங்கிலி பாதிக்கப்படுவது ஏன் என்பது தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார்.
இதையடுத்து, ஆவின் நிர்வாகத்தில் தீவிரமான கட்டுப்பாடு முயற்சிகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது நிச்சயமாக எடுப்பேன் என்றும் மனோ தங்கராஜ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“