கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருவிக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட தேங்காய் விளையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கெடுத்தார்.
அப்போது, “மாவட்டத்தில் விரைவில் ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும். மு.க. ஸ்டாலின் குமரி மாவட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்” என்றார்.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் குறுக்கிட்டு, மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள குவாரி குறித்து கேள்வியெழுப்பினார். இதனால் அந்தக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினர். சம்பந்தப்பட்ட நபர் பத்மநாபபுரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அமைச்சர் மனோ தங்கராஜ், “மாவட்டத்தில் 6 குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நாம் தமிழர் கட்சி பிரமுகர் சீலனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“