மன்னர் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தற்போதைய குமரி மாவட்டம் இருந்தது. அக்காலக்கட்டத்தில் இங்கு சாதிய கொடுமைகள் மேலோங்கி காணப்பட்டன.
பெண்கள் ஆடை மற்றும் தங்க அணிகலன்கள் அணிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்களின் மார்பகங்களுக்கும் முலை வரி விதிக்கப்பட்டது.
இந்தக் கொடுமையான சட்டங்கள் மக்கள் புரட்சி, சட்ட ரீதியாக போராட்டங்களுக்கு பின்னர் விலக்கப்பட்டன. பெண்கள், ஆண்களுக்கு உரிமைகள் கிடைத்தன.
இதற்கு முக்கிய காரணமாக பெண்களின் தோள் சீலை போராட்டம் அமைந்தது. இந்தப் போராட்டத்தின் 200ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு நாகர்கோவிலில் கருத்தரங்கம் ஒன்று சனிக்கிழமை (டிச.17) நடைபெற்றது.
முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அய்யாவழி ஆன்மிக குரு பாலபிரஜாதிபதி அடிகளார், மாநில சிறுபான்மையினர் நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்றனர்.
அப்போது, இதுதொடர்பான மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/