திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் நிலவிய சாதிக் கொடுமைகளுக்கு எதிராக தோள்சீலைப் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டம் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் ஆகும். அந்தக் காலத்தில் குறிப்பிட்ட சில சாதிகள் தவிர மற்ற சாதிகள் முண்டு எனப்படும் மேலாடை அணிந்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இதனை எதிர்த்து 1822-ல் கன்னியாகுமரியில் போராட்டம் வெடித்தது. பின்னாள்களில் அய்யா வைகுண்டர் உள்ளிட்டோரால் இது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
திருவிதாங்கூர் மன்னரும், இங்கிலாந்தின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் முண்டு எனப்படும் மேலாடை அணிய உரிமைக் கொடுத்தார்.
இந்த தோல் சீலைப் போராட்டத்தின் 200ஆவது விழா நாகர்கோவில் நாகராஜா திடலில் மார்ச் 6ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.
இந்தப் விழாவில் தமிழக- கேரள முதல் அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பினராய் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதனை அமைச்சர் தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது மாநகராட்சி மேயர் மேயர் உடன் இருந்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/