Advertisment

'என் அமைச்சர் பதவிக்கு காரணம் துர்கா ஸ்டாலின்': மெய்ய நாதன் பேச்சு

அரசியலில் நான் அமைச்சராக உயர்வதற்கு காரணமானவர் துர்கா ஸ்டாலின் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மெய்ய நாதன்

மெய்ய நாதன்

 அரசியலில் நான் அமைச்சராக உயர்வதற்கு காரணமானவர் துர்கா ஸ்டாலின் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு ஊராட்சியில்  நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை  மாற்றத்துறை  அமைச்சர்  பெய்யநாதன் கலந்து  கொண்டார்.

” இந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் 2016ம்  ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இரண்டாவதாக ஆலங்குடியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் கொடுத்தார்.

அதற்கு முழு காரணம் அம்மா துர்கா ஸ்டாலின் அவர்கள்தான். மீண்டும் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்து அரசியலில் நான் அமைச்சராக உயர்வதற்கு காரணமானவர் துர்கா ஸ்டாலின். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்தி தராமல் இருந்திருந்தால் எனது அரசியலே திசைமாறி போயிருக்கும்.

அப்படி பெரிதும் மதிக்கும் அவர்கள் பிறந்த மண்ணில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment